×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: தமிழின ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை


மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குஜராத்திலிருந்து மதுரை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தமிழின ரயில் பயணிகள் நல சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழா வருகிறது. இதையொட்டி வடமாநிலங்களில் இருக்கும் தென்மாவட்ட தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல உள்ளனர். இதற்காக குஜராத்திலிருந்து செங்கோட்டைக்கு மதுரை வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

குஜராத் மாநிலம் காந்திதாமில் இருந்து அகமதாபாத், வடோதரா, சூரத், வாபி, மேற்கு மும்பை, புதுமும்பை, ரத்னகிரி, மட்கான் (கோவா), மங்களூர், கண்ணூர், கோழிக்கோடு, சேரனூர், பாலகாடு சந்திப்பு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை சென்றுடைய நிலையில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: தமிழின ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vinayakar ,Tamil Nadalam Railway ,Madurai ,Gujarat ,Chengkotta ,Vinayakar Chadurdhi ,Vinayakar Chadurthi ,Dinakaran ,
× RELATED பேருந்து மோதி டிரைவர் பரிதாப பலி